இளம் நடிகரின் நடிப்பை பார்த்து மயங்கிப்போன அஜித் மகள் – அந்த ஹீரோவை வீட்டிற்கே அழைத்த அஜித்!

Author: Rajesh
30 December 2023, 5:52 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகள் அனுஷ்கா டென்னிஸிலும் ஆத்விக் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர்கள். அவ்வப்போது அவர்கள் விளையாடும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இந்நிலையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சமீபத்திய பதிவு ஒன்றில், அஜித்தின் மகள் அனுஷ்கா ப்ரேமம் படத்தில் நிவின் பாலின் நடிப்பை பார்த்து மயங்கிவிட்டார் என்றும் மகளின் ஆசைக்காக நிவின் பாலினை வீட்டிற்கே அழைத்து குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்து விருந்து வைத்தார் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. அல்போன் புத்திரன் கடந்த சில நாட்களாக ஆட்டிஸம் குறைபாடினால் பாதிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர் மூளை குழம்பி எதையேனும் பதிவிட்டு வருகிறார். அவரை மருத்துவமனையில் அனுமதியுங்கள் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!