சினிமாவில் இருந்து விலகிய பிரேமம் பட இயக்குனர்.. காரணம் இதுதானா..!
Author: Vignesh30 October 2023, 3:11 pm
நேரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் தான் பிரேமம்.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் படம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், சரி நம் மனதில் இருந்து நீங்காத இடம் பிடித்து விட்டது. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த கோல்ட் திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
இதைத்தொடர்ந்து, தற்போது கிப்ட் எனும் படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சாக் கொடுக்கும் விதமாக தான் சினிமாவில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார். இதனிடையே, அல்போன்ஸ் புத்திரனின் இந்த அறிவிப்பு தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது, சமீபத்தில் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் அல்போன்ஸ் கூறினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, அதை நீக்கி விட்டார்.