சமந்தாவுக்கு ரூட்டு போட்ட விஜய்? அந்த ஆசை இருக்குனு வெளிப்படையா கூறிய பிரபல இயக்குனர்!
Author: Shree4 April 2023, 7:44 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரமுமான தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளனர்.
அசைக்க முடியாத இடத்தில அமர்ந்திருக்கும் விஜய் பல கோடி பெண் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகராக இருந்து வருகிறார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் புதுமுக நடிகைகளுக்கும் சரி டாப் ஹீரோயின்களுக்கு சரி விஜய் படத்தில் ஒரு முறையாவது நடித்துவிடவேண்டும் என கனவு கொண்டிருப்பார்கள். அவருடன் நடித்தாலே மார்க்கெட் உச்சத்தில் எகிறிவிடும்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் செய்தி என்னவென்றால், ரசிகர் ஒருவர் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனிடம், விஜய் + சமந்தா + அல்போன் = இவர்கள் மூவரும் இணைந்தார் பிரேமம் போன்ற லவ் ஸ்டோரி கிடைக்கும் என கூறியிருக்கிறார். அந்த ரசிகருக்கு பதிலளித்த அல்போன் புத்திரன், ” விஜய் மற்றும் சமந்தா ஓகே சொன்னால் அவர்களை வைத்து ஒரு முழு ஆக்ஷன் லவ் ஸ்டோரி இயக்குவேன் என கூறி இருக்கிறார்.