“கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” ஆல்யா மானசாவுக்கு என்னாச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
20 August 2024, 9:35 am

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் மூலமாக ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆலியா மானசா, சஞ்சய் ஜோடி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். அதனால், இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம் என போட்டி ஒன்றில் பேசி இருந்தார்.

மேலும், சினிமாவில் நடிக்க சம்பளமாக ஒரு நாள் ஷூட்டிங்கிற்க்கு சுமார் 50 முதல் 60 ஆயிரம் வரை சம்பளம் வாங்குவதாகவும் தெரிவித்திருந்தார். முன்னதாக ஆலியா மானசா கடந்த வருடம் ஒரு சோவில் கலந்து கொண்ட போது அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதன் பின்னர், பல மாதங்கள் ஓய்வு எடுத்து தான் சரியானார்.

alyamanasa_Sanjeev_Updatenews360

மீண்டும், ஆலியாவின் விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. கையில் கட்டுடன் இருக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். மறுபடியுமா என அவரே வருத்தமாக குறிப்பிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். விரைவில், குணமாக வேண்டும் என ரசிகர்களும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?