அந்த இடத்தில் நச்சுன்னு ஒரு இச்.. கணவருக்கு தெரியாமல் செய்த விஷயத்தை உளறிய ஆலியா..!
Author: Vignesh2 February 2024, 2:30 pm
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த நடிகர் ரிஷி தான் இனியா சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்துகொண்டு விருதை வாங்கிவிட்டு பேசும் போது, கணவர் தூங்கும் போது அவருக்கு தெரியாமல் எவ்வளவு அழகா இருக்கீங்க என்று ரசித்து பார்த்து இருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் எப்போதும், அவருக்கு நெத்தியில் முத்தம் கொடுத்து விட்டு தான் செல்வேன். சில நேரத்தில் அவர் பண்றது விஜய் சார் பண்றது மாதிரியே இருக்கும் அவ்வளவு க்யூட்டா இருப்பாரு என்று தனது கணவர் குறித்து தெரிவித்திருந்தார்.