தமிழ் சினிமாவில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆலியா மானசா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதே தொடரில் ஆலியா மானசாவுக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து தன்னுடைய பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு ஒரு மகன் ஒரு மகள் என குடும்பத்தோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் குழந்தை பிறப்புக்கு பிறகு சில காலம் கேப் விட்டு இருந்த ஆல்யா மானசா மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆலியா மானசா இனிய தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இனியா தொடரில் நான் நடிக்க ஆரம்பித்த போது 20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் தரப்பட்டது. இப்போது ஒரே ஒரு நாள் சூட்டிங்கிற்கு சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளமாக வாங்குவதாக அந்த பேட்டியில் கூறியிருந்தார் ஆலியா மானசா. சஞ்சீவ் – ஆலியா மானசா இருவரும் அண்மையில் ரூ1.8 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீடு ஒன்றை கட்டியிருந்தது குறிப்பிட்டுத்தக்கது.