சோ கியூட்.. சோ பியூடிபுல்.. மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ஆல்யா மானசா..!

Author: Vignesh
21 March 2024, 6:49 pm

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த நடிகர் ரிஷி தான் இனியா சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRPயின் உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சஞ்சீவ்-ஆல்யா மானசா தற்போது தங்களின் மகள் ஐலாவின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி