அப்படி நடந்தா உனக்கு சங்கு தான்.. ஆல்யா மானசா வெளியிட்ட Video.. விளாசும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
8 May 2024, 11:45 am

வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.

இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த நடிகர் ரிஷி தான் இனியா சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRPயின் உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்காக ஆலியா தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். 50 கிலோ உடல் எடை கொண்டிருந்த ஆலியா மானசா 16 கிலோவாக உடல் எடையை குறைத்து ஆளே ஸ்லிம் ஆக மாறிவிட்டாராம்.

இந்நிலையில், ஆலியா மானசா குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களை அவ்வப்போது, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்த விஷயம். வெளியில் கூட்டி செல்லும்போது குழந்தைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நாய்க்கு சங்கிலி போடுவது போல குழந்தைகள் இருவரின் கையையும் தனது துப்பட்டாவில் கட்டி வைத்து அவர்களை அழைத்து சென்றிருக்கிறார் ஆலியா.

alya manasa

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஆலியாவை வறுத்தெடுத்து வருகின்றனர். குழந்தைகள் வெவ்வேறு திசைகளில் ஓடினாலும், உங்களுக்கு சங்கு தான் என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!