புற்றுநோய், பணக்கஷ்டம், பாதியிலேயே நின்று போன படிப்பு.. பிரபல சீரியல் நடிகையின் வாழ்க்கையில் நடந்த சோகம்..!
Author: Vignesh28 May 2024, 1:40 pm
வெள்ளித்திரை போலவே சின்னத்திரையில் பிரபலங்கள் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இணைகிறார்கள். அப்படி சின்னத்திரையில் நடித்து, நிஜ வாழ்க்கையில் இணைந்த ஜோடி தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி தொடரில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அதில் அவர்களுக்கு ஏற்பட்ட நட்பு அப்படியே காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது.
இருவருக்கும் திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். பிரசவத்திற்காக ஆல்யா மானசா கமிட்டாகி இருந்த ராஜா ராணி 2 தொடரில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாகி பழைய ஆல்வாக மாறி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார். படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக கெஸ்ட் ரோலில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த நடிகர் ரிஷி தான் இனியா சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ரிஷி – ஆல்யா மானசாவின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்கவுட் ஆகி மக்கள் எல்லோருக்கும் பிடித்துப்போக அந்த சீரியல் TRPயின் உச்சத்தை தொட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்காக ஆலியா தனது உடல் எடையை குறைத்து படு ஒல்லியாகிவிட்டார். 50 கிலோ உடல் எடை கொண்டிருந்த ஆலியா மானசா 16 கிலோவாக உடல் எடையை குறைத்து ஆளே ஸ்லிம் ஆக மாறிவிட்டாராம்.
மேலும் படிக்க: விதி மீறலில் ஈடுபட்ட சர்ச்சை பிரபலத்துடன்… கவர்ச்சி உடையில் நெருக்கமாக கீர்த்தி சுரேஷ்..!
இந்நிலையில், நடிகை ஆலியா மானசா தனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சந்தித்த கஷ்டங்கள் குறித்த ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், அவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். காலையில் எழுவேன் மேக்கப் போட்டு முடி சரி செய்து ஆடிச்சனுக்கு செல்வேன். சில நேரம் அவர்கள் கூறும் விஷயம் எனக்கு செட்டாகாது. பல நேரம் அவர்களே என்னை அனுப்பி விடுவார்கள். அந்த நேரத்தில், பொருளாதார நெருக்கடி இருந்ததால் ஜிம் ட்ரைனராக வேலை பார்ப்பது குழந்தைகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது. பாடலின் பின்னணியில் நடனம் ஆடுவது என பல வேலைகளை செய்தேன். சினிமாவில், முயற்சி செய்து கொண்டிருந்த எனக்கு ஒரு சமயம் சின்னத்திரை வாய்ப்பு வந்தது.
மேலும் படிக்க: அவர் ஒரு GAY.. இரண்டு கல்யாணம் செய்த விஜயின் ரீல் அம்மா வெளியிட்ட பகீர் தகவல்..!
அப்போது, எனது அப்பா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். எனவே, எனது அப்பாவை காப்பாற்ற சினிமா கனவை விட்டு சீரியல் வாய்ப்பை எடுத்துக் கொண்டேன். ஆனால், இப்போது ஒரு விஷயத்தை நினைத்து சந்தோஷம், காரணம் சினிமாவில் நடித்திருந்தால் தீபாவளி பொங்கல் எனதான் மக்கள் என்னை பார்த்திருப்பார்கள். இப்போது, என்னை தினமும் பார்க்கிறார்கள். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.