தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார்.
இதனிடையே தான் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் அவரின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
நடிகை டாப்சி செய்தி ஊடகங்கள் புகைப்படம் எடுப்பது பேன்றவற்றை வெகு காலமாகவே எதிர்த்து வருகிறார். இதனால் பத்திரிகையாளர்களுக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் நெட்டிசங்கள் பலரும் நடிகை டாப்சி பன்னுவை இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் டாப்சி பன்னு கூறியிருந்தார். நான் 10 வருடங்களாக ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறேன். எனவே என்னை பற்றி செய்தி ஊடகங்களுக்கு நன்றாகவே தெரியும் நான் புகைப்படம் எடுப்பதை விரும்பமாட்டேன் எனவும், அப்படியிருக்கும் போது நான் என்னுடைய வீட்டை விட்டு வெளியில் வரும்போது புகைப்படம் எடுப்பது, நான் எங்காவது சென்றால் பின்தொடர்ந்து வருவது போன்றவை எனக்கு பிடிக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் சில நேரங்களில் கார் கண்ணாடியில் கேமராவை வைத்தெல்லாம் என்னை புகைப்படம் எடுத்திருப்பதுண்டு அதனை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து நடிகை டாப்சி பன்னு கூறுகையில், நான் ஒரு நடிகையாக இருந்தாலும் மற்றவர்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. சினிமாவில் நடிகையாக இருப்பதினால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
நானும் மற்றவர்களை போலத்தான் எந்த பாதுகாப்பும் இல்லாமல் தெருக்களில் நடக்கிறேன். அதனால் அதற்காக என்னுடைய சுதந்திரத்தை யாரும் என்னிடம் இருந்து பறிக்க அனுமதி இல்லை. நான் வெளியே செல்லும் போது என்னை கேமெராவுடன் பத்திரிகையாளர்கள் பின் தொடர்கிறார்கள் நான் என்ன மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகமா? என்று தன்னுடைய ஆதங்கத்தை அந்த பேட்டியில் நடிகை டாப்சி பன்னு கூறியிருந்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.