லவ் ப்ரபோஸ்.. காதலருடன் உச்சம் தொட்ட ரொமான்ஸ்.. வைரலாகும் அமலா பால் வீடியோ..!

Author: Vignesh
26 October 2023, 1:00 pm

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

amala paul-updatenews360

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

al-vijay-amala-paul updatenews360

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறார். இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரது நண்பர் ஜகத் தேசைய் என்பவரை அமலாபால் காதலித்து வந்துள்ளதாகவும், தற்போது பார்ட்டி ஒன்றில் அவரது பிறந்தநாளின் போது அமலா பாலுக்கு முத்தம் கொடுத்து மோதிரம் மாட்டி இருக்கிறார். பின் ரொமான்ஸ் செய்து மது அருந்தும் வீடியோவையும் அமலாபால் பகிர்ந்துள்ளார்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!