Divorce-க்கு அப்பறம் இப்படி பண்ணலாமா?.. பிரபல நடிகையை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
22 April 2023, 3:15 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால் 2009 இல் நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பிறகு . தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் 2010 ஆம் ஆண்டு தமிழ் படமான சிந்து சமவெளியில் நடித்து விமர்சிக்கப்பட்டார். மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் சர்ச்சைக்குரிய அந்த கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அதன் பின்னர் கதை தேர்வில் கவனம் செலுத்தி நடித்து வந்த அவர், தொடர்ந்து மைனா, தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெய்வ திருமகள் படத்தின் படப்பிடிப்பில் அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார்.

amala-al-vijay-updatenews360

2014 ஆம் ஆண்டில், அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், திருமணமான இரண்டு ஆண்டுகளில் அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர். அமலா இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன் பின்னர் படு மோசமான கிளாமரான காட்சிகளை ஏற்று நடித்தார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை பதிவிடுவார். புது நடிகைகளின் வரவால் அமலா பாலுக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

அங்கு எந்த மாதிரி ரோல் கிடைச்சாலும் நடிப்பேன் என நண்பர்கள் வட்டாரத்தில் கூறியுள்ளாராம். தற்போது சிறுத்தை படத்தின் இந்தி ரீமேக் “போலோ”என்ற படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு அவர் வெறும், ரூ. 25 லட்சம் சம்பளமாக வாங்கினாராம்.

amala paul-updatenews360

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமலா பால், சமீபத்தில் கவர்ச்சியான ஆடையில் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவரின் தற்போதைய பிகினி ஆடை குறித்தும், இவரது நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 729

    2

    2