நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
Author: Selvan6 December 2024, 7:38 pm
கடலுக்கு நடுவே காதல் தருணம்
தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் அமலாபால்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்ச நடிகையாக வலம் வந்த நேரத்தில் பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து,பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண்குழந்தை பிறந்தது.அந்த குழந்தைக்கு வித்தியாசமாக இலை என பெயர் சூட்டினார்.
இதையும் படியுங்க: சம்பாதித்த பணத்தை எல்லாம் தொலைத்த மைனா…என்னமா இப்பிடி பண்ணிட்டீங்களேம்மா..புலம்பும் ரசிகர்கள்..!
தற்போது அவருடைய முதல் திருமண நாளுக்கு,அவருடைய கணவர் ஒரு அழகான இடத்திற்கு கூப்பிட்டு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
கடலுக்கு நடுவே இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்திய தருணத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.