ஆடை பட நிர்வாண காட்சி.. மீண்டும் தமிழுக்கு வரும் அமலா பால்.. எந்த படத்தில் தெரியுமா.?
Author: Rajesh16 May 2022, 1:26 pm
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். இதையடுத்து, மைனா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் பட்டாளத்தை தன் வசம் கொண்டார்.மிக குறிகிய காலத்திலேயே, விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாகவும் வலம் வருகிறார். இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு, கடைசியாக இவர் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளிவந்த ஆடை படத்தில், நிர்வாண காட்சியில் நடித்ததற்காக சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து தமிழ் சினிமாவில் ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அமலா பால் நீக்கப்பட்டார். இருந்தாலும், தொடர்ந்து மற்ற மொழி படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வந்தார். இணையத்தில், ஆக்டிவாக இருக்கும் அமலா பால், ரசிகர்களை கவர்ந்திழுக்க விதவிதமான புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் ஹாலிதா ஷமீம் இயக்கும் மின்மினி படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் அமலா பால். ‘மின்மினி’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 2016ல் நிறைவடைந்தது. இதையடுத்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில், நடிகை அமலா பால் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் கேமியோ அப்பியரன்ஸ் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர்களின் கதாப்பாத்திரம் குறித்த முழு தகவல் இதுவரை வெளியாகவில்லை.