கர்ப்பமாக இருக்கும்போது இதெல்லாம் பண்ணனும்… மகிழ்ச்சியை தேடி செல்லும் அமலா பால்!

Author: Rajesh
25 February 2024, 8:00 pm

நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார்.

இதையடுத்து அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

திருமணம் ஆகி இரண்டு மாதத்திலே கர்ப்பம் ஆகிவிட்டார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது கர்ப்பகாலத்திற்கு ஏற்றவாறு மெல்லிய காட்டன் உடையணிந்து கடற்கரையில் இயற்கை காற்றை ரசித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அமலா பால் கர்ப்பமானதில் இருந்தே தனது குழந்தைக்கும் தனக்கும் ஆரோக்கியத்தை தரும் வகையில் மனதிற்கு மகிழ்ச்சியான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ