‘அமரன்’ வெற்றியை ‘SK 23’ படக்குழுவுடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!

Author: kumar
20 November 2024, 4:35 pm

‘SK 23’ படக்குழுவுடன் ‘அமரன்’ வெற்றியை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய வெற்றியாக, 300 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. இந்த வெற்றியை ‘SK 23’ படக்குழுவுடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன், ‘அமரன்’க்கு கிடைத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார். அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, ‘SK 23’ படக்குழுவிற்கு சுவையான பிரியாணி பரிமாறினார்.

sivakrthikeyan Ar murugadoss celebrates amaran success with sk 23 team

ஒரு மாத காலமாக ‘அமரன்’ விளம்பரப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிவகார்த்திகேயன், சில நாட்களுக்கு முன் ‘SK 23’ படப்பிடிப்பில் மீண்டும் ஈடுபட்டார். சென்னை நகரில் நடைபெற்று வரும் ஷூட்டிங் லொக்கேஷனில், சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒரு முக்கிய ஸ்டண்ட் காட்சியை ஸ்டண்ட்மேன் இல்லாமல் தானே செய்து காட்டியுள்ளார்.

மேலும் படிக்க: சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் பிரபல ஹீரோ… அடுத்தடுத்து தோல்வியால் திடீர் முடிவு!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘SK 23’, காதல், ஆக்ஷன், மற்றும் உணர்ச்சியுடன் கூடிய அதிரடி திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்க, வித்யுத் ஜாம்வால், பிஜு மேனன், மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள். சுதீப் ஏலமோன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 137

    1

    0