அடிமேல் அடி வாங்கும் அமரன்.. காஷ்மீர் நடிகர் கூறுவது என்ன?

Author: Hariharasudhan
8 November 2024, 12:47 pm

அமரன் திரைப்படத்தில் காஷ்மீர் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையைக் காட்டவில்லை என்ற விமர்சனம் எழுவது குறித்து காஷ்மீர் நடிகர் உமைர் பேசியுள்ளார்.

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் தீபாவளி திருநாளான அக்டோபர் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்து இருந்தது. தீபாவளி ரேஸில், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பக்கர் ஆகிய திரைப்படங்களுடன் கோதாவில் குதித்தது. இருப்பினும், முதல் நாளிலேயே 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. இது சிவகார்த்திகேயன் கேரியரில் மிக முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது என சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாக அமைந்துள்ளதால், எஸ்கே இதற்காக பல மெனக்கெடல்களை அளித்து உள்ளதாகவும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இதனிடையே, இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து உள்ளதாக அமரன் படத்திற்கு எஸ்டிபிஐ கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக, தேனாம்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்திலும், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை நிதர்சனமாக அமரன் படம் கூறவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது.

இது குறித்து, காஷ்மீர் மக்களில் ஒருவரும், அமரன் படத்தில் உமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த உமைர் என்பவரிடம் பிரபல மாத இதழ் முன்வைத்து. அதற்கு பதிலளித்த அவர், ” இப்போது நீங்கள் ஒரு ராணுவ வீரர், நான் ஒரு பயங்கரவாதி என வைத்துக் கொள்வோம். நான் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்து, எனக்கு சாப்பாடு வேண்டும் என்று மிரட்டுறேன். அப்போது அவர்கள் எனக்கு பயந்து சாப்பாடு கொடுப்பார்கள். பின்னர், ராணுவத்துக்கு தகவல் கிடைத்து, அந்த வீட்டுக்கு வருகிறார்கள்.

இதையும் படிங்க : 2k கிட்ஸ்களின் டி.ராஜேந்தர்.. கோபமான ஹிப்ஹாப் ஆதி!

அப்போது, ஏன் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள் என ராணுவ அதிகாரியான நீங்களும் அவர்களை கேள்வி கேட்பீர்கள். மக்களால் எவ்வளவுதான் தாங்கிக் கொள்ள முடியும்? சில நேரம் கல் வீசுவார்கள். இதற்கு முன்பு வரைக்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதுதான் நம்முடைய வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், இப்போது ஒரு 6 வருடமாக மக்களின் பார்வையும், புரிதலும் மாற்றம் அடைந்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!