ரூ.200 கோடி வசூல் செய்த இளம் கதாநாயகன்… அசூர வளர்ச்சியால் ஆச்சரியத்தில் கோலிவுட்!
Author: kumar11 November 2024, 11:35 am
அடுத்த சூப்பர் ஸ்டாரா சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகயேன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தமிழகம் மற்றும் தெலுங்கு மொழி மாநிலங்களில் அமரன் படம் வர்த்தக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. முதல் சனிக்கிழமையை விட கடந்த சனிக்கிழமை இரு மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.
நேற்றைய முன்தினம் தமிழ்நாட்டில மட்டும் அமரன் படம் ரூ.11 கோடி வசூல் செய்துள்ளது. இதுவே வெள்ளிக் கிழமை ரூ.5.5 கோடி வசூல் செய்தது.
படம் வெளியான முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் ரூ.89 கோடி வசூல் செய்தது. அடுத்த 10 நாட்களில் வசூல் ரூ.100 கோடியை தாண்டி ரூ.105.5 கோடி எட்டியது.
மேலும் படிக்க: சிவகார்த்திகேயனை திருச்சிக்கே பேக் பண்ண பார்த்தாங்க – அமரன் வெற்றி அப்படியே ஆஃப் பண்ணிடுச்சு!
தெலுங்கில் மட்டும், ரூ.30 கோடி வசூல் செய்து புதிய மைல்கல்லை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ.200 கோடி வசூலை எட்ட உள்ளது.
இந்த மைல்கல்லை இளம் தமிழ் நடிகரான சிவகார்த்திகேயன் எட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ்நாட்டில் ரூ.100 கோடியும் மற்ற மாநிலங்கள், வெளிநாட்டு வசூல் என இதுவரை ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்துள்ளது.