கொண்டாடப்படும் அமரன்.. பிரம்மாண்ட விழா நடத்தும் படக்குழு : சிறப்பு விருந்தினர் இவருதான்!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2024, 6:07 pm

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துள்ளது. இது எஸ்கேவின் அந்தஸ்தை உயர்த்தியுள்ளது.

அமரன் படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், வெளியானதும் மாபெரும் வெற்றியடைந்தது.

இதையும் படியுங்க: ‘காட்டு கவர்ச்சி’ காட்டிய கீர்த்தி சுரேஷ்.. பாலிவுட்டுக்கு போனா மட்டும் தாராளமா?

உணர்ச்சிகரமான திரைக்கதையுடன் கூடிய அமரன் உலகளவில் இதுவரை ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

வெற்றிவிழா மற்றும் சிறப்பு விருந்தினர் :

இத்தகைய மாபெரும் வெற்றியை முன்னிட்டு, அமரன் படக்குழு வெற்றிவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை வரவேற்பதற்கான கோரிக்கை எழுப்பப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

CM Appreciate Amaran Movie

முதல்வர் ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு கேடயங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வரின் ஆதரவு:

அமரன் படத்தின் திரைக்கதை மற்றும் முழுமையான படத்தையும் முதலில் பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், அதைப் பற்றி மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். இப்படம் நன்றாக அமையும் என அவர் குறிப்பிட்டதும், தற்போது இந்த வெற்றியின் முன்னோட்டமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Fans Creating Nonsense Hashtagsடிரெண்டாகும் காலமானார் ஹேஷ்டேக்… எல்லை மீறும் விஜய், அஜித் ரசிகர்கள்!
  • Views: - 176

    0

    0