சினிமா / TV

ஜனநாயகன் படம் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணம்? ஓபனாக உடைத்து பேசிய பத்திரிக்கையாளர்…

விஜய்யின் கடைசி திரைப்படம்

அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரு அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு வருகிற ஜூன் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

இந்த வேளையில் “ஜனநாயகன்” திரைப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் நிலையில் மமிதா பைஜு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த “பகவந்த் கேசரி” திரைப்படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. 

ஜனநாயகனை கைப்பற்றிய அமேசான் பிரைம்?

இந்த நிலையில் “ஜனநாயகன்” திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் ரூ.115 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளதாம். ஆனால் “லியோ” திரைப்படத்தின் ஓடிடி வியாபாரத்தை விட இந்த தொகை மிகவும் குறைவு என்று கூறப்படுகிறதாம். அது மட்டுமல்லாது பிரபல மூத்த சினிமா பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மி, “ஜனநாயகன்” திரைப்படம் 2026க்கு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்து ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.

“ஜனநாயகன் படக்குழு இத்திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை விற்பதற்காக அமேசான் நிறுவனத்தை அணுகியது. ஆனால் இந்த வருடத்திற்கான லைன் அப் முடிந்துவிட்டது. நீங்கள் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியிடுவதாக இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என அமேசான் நிறுவனம் கூறிவிட்டது. இதன் காரணமாகத்தான் இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளிவருகிறது” என்று பிஸ்மி தெரிவித்துள்ளார். 

“ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீப காலமாக ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை ஓடிடி நிறுவனமே முடிவு செய்கிறது என்று பரவலாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஓடிடி உரிமத்தை விற்ற பிறகுதான் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை அறிவிக்க முடிகிறது. இதற்கு “ஜனநாயகன்” திரைப்படமும் விதிவிலக்கு அல்ல என்று தெரிய வருகிறது. 

Arun Prasad

Recent Posts

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

33 minutes ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

34 minutes ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

54 minutes ago

ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…

விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…

1 hour ago

அஜித் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்…? அப்பட்டமான காப்பி : அதுவும் இந்த படமா?

சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…

1 hour ago

விஜய் நடத்திய ரோடு ஷோ… கேரவன் மீது ஏறிய தொண்டர்கள் : ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!

கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…

2 hours ago

This website uses cookies.