BLUE சட்டை மாறன் படத்தை விலைக்கு வாங்கிய அம்பானி – OTT-யில் ரிலீஸ்!

Author: Rajesh
28 February 2024, 5:57 pm

தமிழ் சினிமாவில் சில நல்ல படங்கள் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவது போன்றே சில தோல்வி படங்கள் வெளியாவதும் வழக்கம். எல்லோரும், எல்லா சமயத்திலும் வெற்றிகளையே கொடுக்க முடியாது. சில நேரங்களில் சில தோல்விகளை சந்தித்து தான் கடந்துச்செல்லவேண்டும். ஆனால், இதனை சிலர் ஏற்றுக்கொள்ளமுடியாமல் தோல்வி பட நடிகர்கள் மீது வெறுப்பை திணித்து வருகிறார்கள்.

அப்படித்தான் பிரபலமான திரைப்பட விமர்சகராக இருந்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் ரஜினி, கமல், விஜய் , அஜித் , சிவகார்த்திகேயன், தனுஷ் என முன்னணி ஹீரோக்களின் படங்களை டார் டாராக கிழித்து தொங்கவிட்டவர். இதனாலே இதுவரை பார்த்து கோலிவுட்டே நடுங்கும். ப்ளூ சட்டை ஒரு படத்தை சிறந்த படம் என சர்டிபிகேட் கொடுத்துவிட்டால் அந்த படம் வேற லெவல் ஹிட் தான் என்று மக்களே பரவலாக கருத்து தெரிவிப்பதுண்டு.

சில பேர் ” ஒரு படத்தை நீ இயக்கி வெளியிட்டு பார் அதிலுள்ள சிக்கல்கள், சர்ச்சைகள், பண நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து அன்று தான் தெரியவரும் என்பார்கள். அப்படித்தான் ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் ஆன்டி இண்டியன் திரைப்படம் 3 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆகியது. தற்போது இப்படத்தை அம்பானிக்கு சொந்தமான ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்துள்ளதாக ப்ளூ சட்டை மாறனே தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என பொறுத்திருந்து பாப்போம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ