தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.
பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம்.
முன்னதாக விஜயகாந்த் சினிமாவிற்கு வந்த புதிதில் சில நடிகைகள் இவருடன் சேர்ந்து நடிக்க மறுப்பு தெரிவித்தனர். தற்போது அந்த நடிகைகள் யார் என்று பார்ப்போம்.
நதியா:
80களில் பிரபலமான நடிகையாக ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போதும் இளமையுடன் காட்சி அளிக்கும் இவர், பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார். நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று அவருடன் நடிக்க நதியா மறுத்திருக்கிறார்.
ராதிகா:
80 களின் காலகட்டத்தில் நடிகை ராதிகா ரொம்பவும் எதார்த்தமான கதாநாயகியாக வெற்றி கண்டவர். இவர் கமல், ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டு இருந்தார். இதனிடையே, ராதிகா விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த பின்னாளில் இவர் அவரோடு ஜோடி போட்டு நடித்தது மட்டுமல்லாமல் இருவரும் காதலித்து திருமணம் வரை அந்த உறவு சென்று நின்றது.
அம்பிகா:
80 மற்றும் 90 களில் முன்னணி ஹீரோக்களே அம்பிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டனர். அந்த அளவுக்கு வசீகரமான தோற்றத்தோடு, சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை அம்பிகா கவர்ந்தவர். ஆரம்பத்தில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த அம்பிகா, அதன்பின்னர் 1986 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன தழுவாத கைகள் திரைப்படத்தில் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
ராதா:
80 மற்றும் 90 களின் அன்றைய சினிமாவில் நடிகை அம்பிகாவுக்கு போட்டியாக நடித்தது என்றால் அவருடைய தங்கை ராதா என்று தான் சொல்வார்கள். இவரும் முதலில் விஜயகாந்துடன் நடிக்க மறுத்து பின் அம்மன் கோவில் கிழக்காலே, உழவன் மகன், நினைவே ஒரு சங்கீதம், மீனாட்சி திருவிளையாடல் போன்ற ஹிட் படங்களில் அவருடன் சேர்ந்து நடித்து இருக்கிறார்.
சரிதா:
விஜயகாந்துடன் நடிக்க மறுத்த மற்றொரு நடிகை என்றால் அது சரிதா தான். இவர் மற்ற நடிகைகளை போல இல்லாமல் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலமே தமிழ் சினிமா ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சரிகா முதலில் விஜயகாந்துடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்த சரிதா, அதன் பின்னர் 1986 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் அடித்த ஊமை விழிகள் திரைப்படத்தில் அவருடன் இணைந்து நடித்து இருந்தார்.
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
பள்ளிகளில் ஆங்கிலமும் குறைவாக கற்றுக் கொடுக்க வேண்டும் என திமுக கொள்கை வைத்துள்ளதாக பாஜகவின் ராம சீனிவாசன் கூறியுள்ளார். திருச்சி:…
பாஜகவின் கலை, கலாசார பிரிவின் மாநிலச் செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இருந்து…
This website uses cookies.