தயவு செய்து உதவி பண்ணுங்க ப்ளீஸ்… பிக்பாஸ் அமீரின் வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சே!

Author: Shree
7 September 2023, 1:01 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

ameer pavini

அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் அமீர் வறுமையில் வாடும் இரண்டு மாணவர்களின் கல்வி செலவை ஏற்று அவர்களை படிக்க வைத்து வந்துள்ளார். இதனிடையே தன்னால் அவர்களுக்கு போதுமான உதவிகள் செய்யமுடியவில்லை எனவே வேறொருவர் என்னுடன் உதவிகள் செய்து வந்தார்.

இப்போது அவரும் தன்னால் முடியவில்லை என கூறிவிட்டார். எனவே உங்களில் யாரேனும் தயவு செய்து உதவி செய்யுங்கள் விருப்பமுள்ளவர்கள் என்னை தொர்புகொள்ளலாம் என கூறினார். பாப்புலரான நபர், நடன கலைஞர், அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் அமீருக்கு 2 மாணவர்களை படிக்க வைக்க முடியாதா? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 377

    0

    0