சனிபூனை துணை கேக்குற மாதிரி இருக்கு.. பிரபல இயக்குனரை வற்புறுத்திய தனுஷ்..!

Author: Vignesh
22 July 2024, 10:21 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிகராக அறிமுகம் ஆனார். அதன் பிறகு முதல் திருடா திருடி, காதல் கொண்டேன் , சுள்ளான் , புதுப்பேட்டை, பொல்லாதவன் , ஆடுகளம் வேலையில்லா பட்டதாரி , மாரி , அசுரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது வர தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இடத்தை தக்கவைத்திருக்கிறார். அடுத்தடுத்து மாஸான திரைப்படங்களில் நடித்து வரும் தனுஷ் நடிகராக மட்டுமே இயக்குனராகவும், தன்னை நிரூபித்து வருகிறார். இதன் பின்னர், தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் அமீர் தனுஷ் பற்றிய ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். தனுஷ் நடிப்பில் மாறன் என்ற படம் 2022-ல் பொலிட்டிக்கல் ஆக்சன் திரில்லர் படமாக அமைந்திருந்தது. முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இயக்குனர் கார்த்திக்நரேன் இயக்கியிருந்தார். முதலில் இந்த படத்தின் கதையை கேட்டு அமீர் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். ஆனால், அமீர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று தனுஷ் கருதி அமீரை அழைத்து எப்படியாவது நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறாராம். உடனே சனிபூனை துணை கேட்கிற மாதிரி இருக்கு தனுஷ் என்று கூறினாராம். இதைக் கேட்டதும் தனுஷ் சிரிக்க அவருக்காக மட்டும்தான் நடித்தேன் என அமீர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஆனால், மாறன் படம் அட்டர் பிளாப் ஆனது தான் மிச்சம்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!