“இது Swimming Time” பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய விஜய் பட நடிகையின் வீடியோ வைரல்.!

Author: Rajesh
23 June 2022, 2:39 pm

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமீஷா பட்டேல். இவர் தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது ஹீரோயினாக நடித்த இவர், அடுத்ததாக பாலிவுட் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அதன்பின் அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

46 வயதாகும் அமீஷா பட்டேல், இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அதில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த வயசிலும் அவர் இளம் ஹீரோயின்களுக்கு இணையாக இருப்பதாக பாராட்டி வருவதோடு, அவரின் படு ஹாட்டான பிகினி வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!