அவங்க தாலி எடுத்து கொடுத்தாதான் அமீர் கூட கல்யாணம்.. கட் அண்ட் ரைட்டாக பேசிய பாவினி..!

Author: Vignesh
23 January 2024, 9:11 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார்.

amir2

திருமணம் எப்போது என்று தான் பேட்டிகளில் இருவரிடமும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், ஏதாவது பதில் சொல்லி இருவரும் கேள்விகளை சமாளித்து வந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருவரும் தங்கள் திருமணம் இந்த வருடம் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். மேலும், விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்று பாவினி தெரிவித்துள்ளார். அவர்தான் நாங்கள் தற்போது ஒன்றாக இருக்க காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி