இப்படியா வாழ்த்து சொல்லுறது…?வாங்கிக்கட்டிய அமீர் – பாவினி ஜோடி!

Author: Rajesh
25 December 2023, 7:00 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் பாவினி. மாடல் அழகியான இவர் சின்ன தம்பி தொடரில் நடித்து சீரியலில் என்ட்ரி ஆனார். தொடர்ந்து தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இவர் தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் பிரதீப் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அதன் பின்னர் மீண்டும் சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் தான் பிக்பாஸில் கலந்துக்கொண்டார்.

amir2

பிக்பாஸில் அமீர் இவரை ஒரு மனதாக உருகி உருகி காதலித்தார். பின்னர் அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பின்னர் அமீரின் உண்மையான காதலை புரிந்துக்கொண்டு அவருக்கு ஓகே சொல்லி காதலித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

அதற்கு ஓகே சொன்னதே பாவினியின் அம்மா தானாம். ஒரே பிளாட்டில் ஒன்றாக இருங்கள் என அட்வைஸ் கொடுத்தாராம். மேலும், இவர்களுடன் அமீரின் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்க வைத்துள்ளதாக பாவனி கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து நெருக்கமாக கட்டியணைத்து ரொமான்ஸில் மூழ்கி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி இணையவாசிகளின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளனர்.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…