கண்டிஷனுடன் லிவிங் டுகெதர்.. ஒரே வீடு, ஆனால்.. ஷாக் கொடுத்த அமீர் – பாவ்னி..!

Author: Vignesh
25 August 2023, 10:00 am

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பாவனி ரெட்டி. அவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார்.பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.

அது ஷோ பார்ப்பவர்கள் எல்லோரையுமே கலக்கமடைய வைத்தது. அதற்கு பிறகு அதே ஷோவில் வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை சொன்னார். ஆனால் பாவனி அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

amir

அதன்பின் பாவனியிடம் பிக் பாஸ் ஜோடிகள் 2 சீசனில் தன் காதலை வெளிப்படுத்தினார் அமீர். அதிலிருந்து இருவரும் ஜோடியாக வெளியில் சுற்றி வந்தனர்.

தற்போது, இருவரும் ஒரே வீட்டில் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி இணையதளத்தில் கசிய ஆரம்பத்தில் பாவனின் கர்ப்பம் என்றும் கல்யாணம் ஆகிவிட்டது என்றும் செய்திகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

amir pavni - updatenews36y0

அதேபோலத்தான் இதுவும் நாங்கள் பிரியமாட்டோம் என்று அமீர் தெரிவித்திருக்கிறார். தற்போது, நாங்கள் ஒரே வீட்டில் வசிக்கிறோமே தவிர தனித்தனி பெட்ரூமில் தான் இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது சினிமாவில் சாதித்துவிட்டு அதன் பின்னர் நாங்கள் திருமணம் செய்து இல்லற வாழ்க்கை வாழ போகிறோம் என்றும், தெரிவித்துள்ளார். இதனை கேட்டு நெட்டிசன்கள் ஒரே வீட்டில் தனித்தனி பெட்ரூமா என கலாய்த்து வருகிறார்கள்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்