சாதியை முன்னிலைப்படுத்தும் புதிய இயக்குனர்கள்..! அமீர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Author: Rajesh
15 February 2022, 2:53 pm

தமிழ் சினிமாவின் ரசிகர்களை மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஈர்த்தவர் தான் அமீர். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

இந்த நிலையில், ‘இறைவன் மிக பெரியவன்’ என பெயரிடபட்டுள்ள திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அவர், இன்றைய காலகட்டத்தில் இஸ்லாம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது என்றார். மேலும், இன்றைக்கு சினிமா துறைக்கு புதிதாக வருபவர்கள் தான், தங்கள் சாதி அடையாளங்களை முன்னிறுத்துகிறார்கள் பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளார். இந்தப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1703

    0

    0