அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன்.. பதறிப்போன ரசிகர்கள்..!
Author: Vignesh15 March 2024, 5:14 pm
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இவர், உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து உலக இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதா பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அமிதாப் பச்சனின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது, இன்று காலை அமிதாப் பச்சன் திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார். அவருக்கு, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மும்பையில் இருக்கும் தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு Angioplasty சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.