என்னை கொன்னுராதீங்க?.. பொதுவெளியில் பகிரங்கமாக பேசிய சூப்பர் ஸ்டார்..!
Author: Vignesh26 June 2024, 9:26 am
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர், உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து உலக இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதா பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அமிதாப் பச்சனின் குறித்த தகவல் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. தற்போது, கதையின் நாயகனாக நடிப்பதை குறைத்துக் கொண்ட அமிதாப்பச்சன் பெரிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார். மகாநதி படம் இயக்கிய நக் அஸ்வின் இயக்கிய கல்கி படத்தில் மகாபாரத கதையில் இடம் பெற்ற அஸ்வத்தம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமிதாப்பச்சன்.
பிரபாஸ், கமலஹாசன், தீபிகா படுகோன் என நாட்டின் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 27ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் pre ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசும் போது நாக் அஸ்வின் படம் குறித்து சொன்னபோது என் கதாபாத்திரம் எப்படி இருக்கும் பிரபாஸ் எப்படி இருக்க போகிறார் போன்றவற்றை கூறினார். படத்தில் பிரபாஸை தூக்கி எறியும் மிகப்பெரிய ஆள் என் கதாபாத்திரம். அதற்காக பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். படத்தில் நான் செய்வதை பார்த்த பிறகு என்னை படுகொலை செய்யாதீர்கள் என்று வேடிக்கையாக பேசியுள்ளார்.