பிரம்மாண்ட பங்களாவை மகளுக்கு பரிசாக கொடுத்த அமிதாப் பச்சன் – இத்தனை கோடியா?
Author: Shree25 November 2023, 7:19 pm
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.
இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இவர், உலக அழகி ஐஸ்வர்யாவை திருமணம் செய்து இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தற்போது அமிதாப் பச்சன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அமிதாப் பச்சன் தன் மகள் ஸ்வேதா பச்சனுக்கு தான் வாழ்ந்த ஜூஹூ பங்களாவை பரிசாக கொடுத்துள்ளாராம். தன் பெயரில் இருந்த அந்த வீட்டை அமிதாப் பச்சன் நவம்பர் 8ஆம் தேதி மகள் பெயரில் மாற்றி கொடுத்துள்ளாராம்.
அமிதாப் பச்சன் சினிமாவிற்கு வந்து சம்பாதித்து வாங்கிய பணத்தில் முதன்முதலாக வாங்கிய வீடாம் அது. அதன் விலை அரை நூறு கோடி ரூபாயை விட அதிகம் என்கிறார்கள். அந்த ஆடம்பர பங்களாவை சுற்றி இயற்கையான அம்சங்கள், தாராளமான இடங்கள் , பல வித விதமான டிசைன்களுடன் இருக்கிறதாம்.