விபத்தில் படுகாயம் அடைந்த சூப்பர் ஸ்டார்.. விலா எலும்பு உடைந்து தீவிர சிகிச்சை..!

Author: Vignesh
6 March 2023, 5:30 pm

படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்தி திரையுலகில் பிக் பி என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் புராஜெக்ட் கே என பெயரிடப்பட்ட படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

இதற்காக ஐதராபாத் நகரில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அப்போது, நடிகர் அமிதாப்புக்கு வலது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. தசை பகுதியும் பாதிப்படைந்து உள்ளது.

amitabh bachchan - updatenews360

இதனால், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அவர் உடனடியாக ஐதராபாத் நகரில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சேர்ந்து உள்ளார். அவருக்கு டாக்டர்கள் சி.டி. ஸ்கேன் செய்து உள்ளனர்.

இதன்பின்பு, அவர் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர். இதனை தொடர்ந்து, அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். வீட்டிலேயே இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது:- “ஒரு ஆக்ஷன் காட்சியில் நடிக்கும் போது தனக்கு காயம் ஏற்பட்டது என்றும், விலா பகுதியில் தசை கிழிவு மற்றும் rib cartilage உடைந்து இருக்கிறது என்றும், ஹைதராபாத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள் எனவும், அங்கு சிகிச்சை பெற்று மும்பைக்கு திரும்பி இருப்பதாகவும், ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கிறார்கள்.” என்றும் தெரிவித்துள்ளார்.

amitabh bachchan - updatenews360

மேலும் அவர் “ஆம், மூச்சு விடும்போதும் நகரும்போதும் வலி அதிகம் இருக்கிறது என்றும், சரியாக பல வாரங்கள் ஆகலாம் எனவும், வலி குறைய மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என அமிதாப் அந்த விபத்து பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 489

    0

    0