ஆண்டு வருமானமே இத்தனை கோடியா? அமிதாப் பச்சனின் முழு சொத்து மதிப்பு!

Author: Rajesh
20 January 2024, 5:21 pm

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.

amitabh-bachchan-updatenews360

இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருடைய மகன் அபிஷேக் பச்சனும் தன் தந்தையைப் போலவே பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருகிறார். மருமகள் ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக இருந்து வருகிறார்.

amitabh bachchan - updatenews360

இந்நிலையில், தற்போது நடிகர் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆண்டு ஒன்றிற்கு ரூ. 60 கோடி வரை வருமானம் ஈட்டி வரும் அமிதாப் பச்சனின் முழு சொத்து மதிப்பு ரூ. 3200 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதில் பல கோடி கணக்கில் பங்களா , சொகுசு கார்கள் உள்ளிட்டவை அடங்கும்.

  • income tax department sent notice to empuraan director prithviraj பிரித்விராஜ்ஜுக்கு வந்த நோட்டீஸ்; கவர்மெண்ட்டு வேலையை காட்டிருச்சு- பொங்கும் நெட்டிசன்கள்…