Shooting’கு லேட் ஆகிடுச்சு… பைக்கில் லிஃப்ட் கேட்டு ஏறி சென்ற அமிதாப் பச்சன் மீது போலீஸ் நடவடிக்கை!

Author: Shree
17 May 2023, 5:44 pm

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், 60 ஆண்டுக்களாக திரையுலகில் கொடிக்கட்டி பறந்தார். இப்போதும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி ஹோட்டல் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருவது மட்டுமின்றி சினிமாவிலும் முதலீடு செய்து இருக்கிறார்.

இதன்மூலம் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமிதாப் பச்சன். மேலும் இவரின் சொத்துமதிப்பு மட்டும் ரூ. 3000 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. தற்போது 80 வயதாகும் அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஷூட்டிங்கிற்கு காரில் வந்த அமிதாப் பச்சன் இடையில் ட்ராபிக் ஆனதால் மிகவும் தாமதமாகியுள்ளது. இதனால் காரை விட்டு இறங்கி பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிச்சென்றுள்ளார்.

இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ள அமிதாப் பச்சன், சவாரி கொடுத்ததற்காக நன்றி நண்பரே… உங்களை யாரென தெரியாது. ஆனால், தீர்க்க முடியாத போக்குவரத்து நெருக்கடியை தவிர்த்து, நீங்கள் என்னை பணி செய்யும் இடத்திற்கு சரியான நேரத்திற்கு, விரைவாக கொண்டு சென்று விட்டு விட்டீர்கள். தொப்பி போட்ட, ஷார்ட்ஸ் அணிந்த மற்றும் மஞ்சள் வண்ண டி-சர்ட்டின் உரிமையாளருக்கு எனது நன்றிகள் என பதிவிட்டிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஹெல்மட் அணியாமல் செல்லும் நடிகர் அமிதாப் பச்சன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தததால் மும்பை போலீஸ் அவர் மீது நடவடிக்கை முன்வந்துள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 471

    0

    0