ஐஸ்வர்யா ராய் மகளுக்கு நேர்ந்த கொடுமை: பதட்டத்தில் டெல்லி High Court – பரபரப்பில் பச்சன் குடும்பம்!

Author: Shree
20 April 2023, 8:29 am

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையும் உலக சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும் பார்க்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி என பலரும் பட்டம் பெற்றாலும் இன்றும் ‘உலக அழகி’ என சொன்னால் முதலில் நமது நியாபகத்துக்கு வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய் தான்.

குறிப்பாக 90ஸ் கிட்ஸ்களுக்கு எவ்வளவோ நல்ல பேவரைட் ஹீரோயின்ஸ் இருந்தாலும், கனவு கன்னியாக இன்னும் மனதில் நிலைத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். ஹிந்தி மற்றும் தமிழ் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், குரு, எந்திரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து 2007ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதியா பச்சன் என்ற மகளும் உள்ளார். தற்போது 11 வயதாகும் ஆராதியா பச்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகார் மனுவில் “தனது உடல்நிலை குறித்து போலியான செய்திகளை வெளியிட்டதாக யூடியூப் டேப்லாய்டுக்கு எதிராக” மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யா (11), தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு வரும் வியாழக்கிழமை விசாரிக்கிறது. 11 வயதான ஆராத்யா தாக்கல் செய்த மனுவில், தன்னைப் பற்றிய “எல்லா வீடியோக்களையும் பட்டியலிலிருந்து நீக்கி செயலிழக்கச் செய்ய” 10 நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த வழக்கில் கூகுள் எல்எல்சி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (குறையறிதல் பிரிவு) ஆகியவையும் பங்கு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1118

    20

    12