அட.. நம்ம அமலா பாலின் ரீல் மகளா இது..? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!

Author: Vignesh
18 January 2023, 1:44 pm

தமிழ்ப்படங்களில் அறிமுகம் ஆன பல குழந்தை நட்சத்திரங்கள் எதிர்காலத்தில் பெரிய நடிகையாக ஜொலித்து இருக்கின்றார்கள். அப்படி திரைக்குள் வந்து நடிகை மீனா பின்னாள்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே ஜோடியாக நடித்தார்.

அதேபோல நடிகை நீலிமா இன்று சின்னத்திரையில் கோலோச்சும் நடிகையாக இருந்து வருகிறார். இவர் குழந்தை நட்சத்திரமாக தேவர்மகனில் அறிமுகம் ஆனவர்தான் இவர். இவ்வளவு ஏன்? களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான்.

yuvasri lakshmi - updatenews360

அந்த வகையில் அமலா பால் நடித்த அம்மா கணக்கு என்னும் திரைப்படத்தின் மூலம் யுவ ஸ்ரீ லட்சுமி திரை உலகுக்கு அறிமுகம் ஆனவர். அமலா பாலுக்கு மகளாக இதில் சிறுமி யுவ ஸ்ரீ லெட்சுமி நடித்து இருந்தார்.

யுவ ஸ்ரீ லெட்சுமியின் பூர்வீகம் காரைக்கால். இவர் குழந்தை நட்சத்திரமாக, நான்காம் வகுப்பு படிக்கும் போதே பார்வை என்னும் குறும்படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து யுவ ஸ்ரீ லெட்சுமி, அப்பா, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களில் நடித்து பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.

yuvasri lakshmi - updatenews360

இப்போது ‘நினைவெல்லாம் நீயடா’ என்னும் திரைப்படத்தில் யுவ ஸ்ரீ லெட்சுமி நடித்துவருகின்றார். தற்போது அவரது அப்பாவுடன் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்கள் அமலா பாலுடன் நடித்தப் பெண் இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே என்று கபெபதிவிட்டு வருகின்றனர்.

yuvasri lakshmi - updatenews360
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 878

    2

    0