Adjust பண்ணேன்.. இன்ஃபெக்ஷன் ஆகிடுச்சு.. பகீர் கிளப்பிய நடிகை அம்மு அபிராமி..!

Author: Vignesh
23 December 2023, 7:39 pm

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

ammu abhirami updatenews360

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், தற்போது கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு. மேலும், அவ்வப்போது Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது, கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்து இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது. சமீபத்தில், அம்மு அபிராமி அளித்த பேட்டியில், பல கோடி போட்டு படம் எடுக்குறாங்க ஆனா, நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் செஞ்சு கொடுக்கறது கிடையாது. பல படங்களில் நான் வேலை செஞ்சு இருக்கேன். அங்க பாத்ரூம் போறதுக்கும், டிரஸ் மாத்திக்கிறதுக்கும் கஷ்டப்பட்டு இருக்கேன். வெளியிடங்களில் ஷூட் செய்யும் போது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா என்று சொல்றாங்க.. கண்ட கண்ட இடத்துல பாத்ரூம் போறதால எனக்கு இன்ஃபெக்ஷன் ஆயிருச்சு, இந்த மாதிரி கஷ்டங்களை அட்ஜஸ்ட் பண்ணி தான் பல பேர் நடிச்சிட்டு வராங்க.. இந்த மாதிரி விஷயங்களை எப்படி பொறுத்துக்க முடியும். இதெல்லாம் சூட்டிங்கில இருக்க வேண்டிய அடிப்படை உரிமைதானே என்று அம்மு அபிராமி பேசியுள்ளார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?