Body Shaming பண்றாங்க.. குமுறிய அம்மு அபிராமி..!

Author: Vignesh
30 September 2023, 5:45 pm

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்துமிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

ammu abhirami updatenews360

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், தற்போது கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு. மேலும், அவ்வப்போது Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஆரம்பத்தில் ஒல்லியாக இருந்த அபிராமி தற்போது குண்டாகிவிட்டார் என சமீபகாலமாக தன்னை பற்றி வைக்கப்படும் விமர்சனத்துக்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். தான் உடல் எடையை குறைக்க தற்போது முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

ammu abhirami updatenews360
  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி