லவ் பண்ணி.. செம அடி.. வீட்டில் சிக்கிக் கொண்டது குறித்து மனம் திறந்த தனுஷ் பட நடிகை..!

Author: Vignesh
16 March 2024, 4:41 pm

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

ammu abhirami updatenews360

குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், தற்போது கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு. மேலும், அவ்வப்போது Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது, கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்து இருக்கிறார்.

Ammu Abirami - Updatenews360

சமீபத்தில், அம்மு அபிராமி அளித்த பேட்டியில், தான் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும்போதே காதலித்து வீட்டில் மாட்டிக்கொண்டதாக தெரிவித்து இருக்கிறார். அது ஒன் சைடு லவ் தான், அதை மறைக்க கூட முடியாமல் வீட்டில் மாட்டி அடிவாங்கி இருக்கிறேன். அதை எப்போதும் மறக்க முடியாது என அம்மு அபிராமி கூறி இருக்கிறார். மேலும், வரும் கணவர் தன்னை புரிந்துகொள்பவராக இருந்தால் போதும், அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்யும் திருமணமாக இருந்தாலும் சரி என அம்மு அபிராமி தெரிவித்து இருக்கிறார்.

  • Captain Vijayakanth first death anniversaryகேப்டன் விஜயகாந்த் நினைவு நாள்…கண் கலங்கிய சினிமா பிரபலங்கள்..!
  • Views: - 227

    0

    0