லிவிங் டூ கெதருக்கு டாட்டா.. கௌதமி இடத்தில் கமலிடம் சரண்டர் ஆன பிரபல நடிகரின் மனைவி..!
Author: Vignesh16 December 2023, 11:45 am
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர நடிகரான கமல் ஹாசன் 1978ம் ஆண்டு வாணி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் வாணி உடனான திருமண உறவை பத்து ஆண்டுக்கு பின் விவாகரத்து செய்து முறித்துக்கொண்டார்.
அதன் பிறகு 1988ம் ஆண்டு குஜராத்தி நடிகை சரிகாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன். அதன் பின்னர் 2004ம் ஆண்டு கமல் சரிகாவையும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.
இதையடுத்து தான் நடிகை கௌதமியுடன் திருமணம் செய்யாமலே லிவிங் முறையில் வாழ்ந்து அவரையும் பிரிந்தார். இப்படி கமல் ஹாசனை பற்றி பல கிசு கிசு, விமர்சனங்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறியும் அவர் உலக திரையில் உலக நாயகனாகவும், ரசிகர்கள் மனதில் ஆண்டவராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை கௌதமியுடன் 13 ஆண்டுகள் கமலஹாசன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். அந்த சமயத்தில், கௌதமி கமலஹாசனின் திரை வாழ்க்கையிலும் பிசினஸ் ஆகியவையும் பார்த்துக் கொண்டார். எனினும், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில், பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி அமிர்தா ராம் என்பவர் தற்போது கமலுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், பிசினஸ் போன்றவற்றையும் பார்த்துக் கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.