நான் கர்ப்பமாக இருக்கிறேன்…. குட் நியூஸ் சொன்ன எமி ஜாக்சனுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Author:
1 November 2024, 11:08 am

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன். மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கி அதன் பின்னர் நடிகையாக மாறி தமிழ் தெலுங்கு தமிழ் மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

amy jackson

இவர் நடித்த முதல் திரைப்படம் மதராசப்பட்டினம். இத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. இவரை முதன் முதலில் திரைப்படத்துறைக்கு அழைத்து வந்தவரே இயக்குனர் ஏஎல் விஜய் தான். மதராசபட்டினம் திரைப்படத்தில் துரையம்மா என்ற கேரக்டரில் பிரிட்டிஷ் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.

amy jackson

மதராசபட்டினம் திரைப்படத்தில் எமி ஜாக்சனின் அழகும் அவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அந்த படத்தை தொடர்ந்து தமிழில். ஐ 2.0 , தங்க மகன், தெறி, மிஷின் சாப்டர் 1 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சனுக்கு இரண்டாம் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கிறது.

amy jackson

அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார் முன்னதாக ஏமி ஜாக்சன் ஜார்ஜ் பெனாயிட்டோ என்பவருடம் லிவிங் லைஃப் வாழ்ந்து கர்ப்பம் தரித்து ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார் அதன் பின்னர் அவரை பிரிந்துவிட்டார்.

amy jackson

தன்னுடைய மகனுக்கு நான்கு வயது ஆகும் நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்து விட்டார். பின்னர் அண்மையில் ஏமி ஜாக்சன் என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகரான எட் வெஸ்ட்விக் என்ற நீண்ட நாள் காதலரை கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பிரம்மாண்டமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது ஏமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அறிவித்திருக்கிறார். இதை எடுத்து எமி ஜாக்சன் மற்றும் இடவெஸ்ட் விக் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!