நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.
இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை காதலித்து கர்ப்பமாகி சில வருடத்திலேயே இருவருக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.
அதையடுத்து, மீண்டும் எட் வெஸ்ட்விக் என்ற வேறொரு ஹாலிவுட் நடிகருடன் காதலில் விழுந்து நெருக்கமாக புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் தற்போது தனது காதலனுடன் இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள எமி ஜாக்சன் நம் நாட்டின் பிரசித்திபெற்ற இடங்களான ராஜஸ்தான், உதய்ப்பூர், மும்பை, மஹாராஸ்டிரா, டெல்லி போன்ற இடங்களுக்கு சுற்றிப்பார்த்து வருகிறார்.
மேலும், தனது காதலன் குறித்து பேசிய அவர் எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் இணைதுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். மேலும், நான் கமிட்டாகி இருந்த படங்களில் கூட நடித்து முடித்துவிட்டேன். எனவே திருமணத்திற்கு இது தான் சரியான நேரம் என கூறினார்.
எமி ஜாக்சன் ஏற்கனவே ஒரு நபரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து கர்ப்பமாகி ஒரு மகனை பெற்று அதன் பின்னர் ஒரே வருடத்தில் அந்த நபரை பிரிந்து இந்த புதிய காதலனுடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்த நபரை திருமணம் செய்துக்கொள்ளும் முடிவில் இருந்தாலும் கூட அவரது மகனின் எதிர்காலம் தான் கேள்வி குறியாக இருக்கும் என பலர் கூறி வருகிறார்கள்.
இப்படியான நேரத்தில், எமி ஜாக்சன் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எமி ஜாக்சன் முகத்தில் சர்ஜரி செய்து கொண்டாரா?.. அழகா மாற நினைத்து மோசமாக மாறிவிட்டாரே என்று விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து காட்டமாக பதிலடி கொடுத்துள்ள எமி ஜாக்சன்,
“நான் ஒரு நடிகை. என் வேலையை நான் சரியாக தான் செய்கிறேன். நான் UK-வில் நடித்து வரும் படத்திற்காக உடலை குறைத்து ஒல்லியாக வேண்டி இருந்தது. ஆனால் அதற்காக என்னை பற்றி இணையத்தில் வரும் விமர்சனம் வருத்தத்தை தருகிறது. பல நடிகர்கள் படங்களுக்காக அவர்களது தோற்றத்தை மாற்றுவதை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக ரசிகர்கள் அவர்களை பாராட்டுகிறார்கள். ஆனால் , அதுவே ஒரு நடிகை செய்தால் அவர்களை என்னை போன்று இப்படி மோசமாக விமர்சிகிறார்கள்” என பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.