நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவருடைய ஐம்பதாவது படத்தை அவரே இயக்கி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபாலை நடிக்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக தனுஷ் 50 படத்தின் ஹீரோயின் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் அபர்ணா பாலமுரளி, த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் இடம் பெற்ற நிலையில், இப்போது அந்த லிஸ்டில் மார்க்கெட்டை இழந்து மும்பை பக்கம் தஞ்சம் அடைந்த அமலாபாலின் பெயர் வந்திருக்கிறது.
ஆனால் முன்னதாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷ் மற்றும் அமலாபால் இருவரும் ஏதாவது ஒரு படத்தில் இணைந்தால் அதை எப்படியோ கெடுத்து விடுவாராம். ஆனால், இப்போது கதையே வேற மாதிரி ஆகிவிட்டது தனுஷ் தன்னுடைய மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இப்போது சுதந்திர பறவையாக இருக்கும் தனுஷுக்கு மாமனார் ரஜினி எந்த கட்டுப்பாட்டையும் விதிப்பது இல்லையாம். ஆதனால், தனுஷின் ஐம்பதாவது படத்திற்கு கதாநாயகியாக யார் என்ற லிஸ்டில் அமலாபால் பெயர் வந்திருப்பதால் ரஜினி குடும்பம் அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில், தனுஷுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. எங்கேயோ இருந்த அமலா பாலை இந்த படத்திற்காக தனுஷ் கொண்டு வந்திருப்பதாகவும், தனுஷ் மற்றும் அமலா பால் இருவரும் வேலையில்லா பட்டதாரி படத்தில் இணைந்து நடித்த போது அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கம் படப்பில் மட்டுமல்ல திரை மறைவிலும் இருந்ததாகவும், இந்த விஷயம் தனுஷின் வீட்டில் பூதாகரமாக தற்போது கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
This website uses cookies.