பிரபாஸ்க்கு மீண்டும் ஒரு ஆதிபுருஷ்? கல்கி 2898 AD திரை விமர்சனம்..!!
Author: Udayachandran RadhaKrishnan28 ஜூன் 2024, 7:45 மணி
பிரபாசோட அடுத்த பிரம்மாண்டம், தெலுங்கு சினிமாவின் அடுத பாகுபலினு பயங்கர எதிர்பார்ப்போட வெளியாகிருக்க கல்கி படம் எப்படி இருக்கு… தியேட்டர் பக்கம் போலாமா, இல்ல இருக்குற காச காப்பாத்திக்கலாமாங்கறது இப்போ பாக்கலாம் .
கதைக்களம்:
கல்கி 2898 AD ஆரம்பதுலயே மகாபாரத போரோட முடிவுல அசுவத்தாமன் பாண்டவர்களோட வம்சத்த அழிக்க அதுக்கு கிருஷ்ணர் அசுவத்தாமனனுக்கு சாபமும் வழங்கி அதுக்கான தீர்வ கலியுகத்துல கிடைக்கும்ன்னு சொல்றதோட படம் ஆரம்பிக்குது.
கலியுகதோட இறுதில உலகின் கடைசி நகரமா காசிய காட்டி அத மேல காம்ப்ளக்ஸ்கிற இடதுல இருந்து யாசக்கின் (கமல்ஹாசன்) முழு கட்டுபட்டுல வச்சு இருக்க. கொஞ்சம் நீளமான ஒரு என்ட்ரியோட பைரவா (பிரபாஸ்), புஜ்ஜிய (கீர்த்தி சுரேஷ்) காட்டி முடிக்க அப்போ காம்ப்ளக்ஸ்ல கர்ப்பமா இருந்த சுமதி (தீபிகா படுகோன்) தப்பிச்சு போக அவங்க சுமதிய பிடிச்சு கொடுக்குற வேல பைரவாகிட்ட வர, அப்போ அவங்கள காப்பாத்த அசுவத்தாமன் வந்து நின்னாதுக்கு அப்புறம் என்ன நடந்தது அப்படிக்கிறதுதான் கல்கி 2898 AD படாதோட மீதி கதை.
சிறப்பு:
விஷுவல் மூலமா கல்கி இந்திய சினிமாவோட அடுத்தகட்டத்துல நிக்குது. Mad max, Dune படங்கள்ள பாத்தமாதிரியான ஒரு பீல் கிடைக்கிறத தவிர்க்க முடியல அப்படினாலும் இந்திய சினிமாக்கு கொஞ்சம் புதுசு தான்.
VFX பொறுத்தவரை எந்த வித பிசிறும் இல்லாம கட்சிதமா பண்ணிக் கொடுத்துருக்காங்க. இந்த அளவுக்கு மெனகெட்டாலும் அவுட்புட் சிலபடங்களுக்கு சரியா அமையிறது இல்ல.
இந்த விஷ்வல இன்னும் தூக்கி காட்டுறது படாதோட சினிமாடோகிராபி தான் Djordje Stojiljkovic கிற செர்பியன் சினிமாடோகிராபரா இந்த படத்துல work பண்ண வச்சிருக்காங்க
இவரு 2019ல Breaking Point: A Star Wars Storyகிற ஷார்ட் பிலிம்ல சினிமாடோகிராபரா work பண்ணிருக்காரு Star Wars மாதிரியான பெரிய franchise ல work பண்ணாதுனாலயோ என்னவோ ஒரு Grand Visualல எப்படி work பண்ணனுமோ அப்படி பண்ணிருக்காரு.
Make-Up, Costumes, Art Direction எல்லாம் மறுபடியும் Madmax, Dune எல்லாம் நியாபகபடுத்தினாலும் பெரிய குறைய தெரியல. மகாபாரத காட்சியெல்லாம் செட், காமிரா, மேக்கிங்லயே மிரட்டிட்டாங்க.
அமிதாபட்சன் இந்த படத்த முடிஞ்ச அளவுக்கு தாங்குராரு அதுவும் இரண்டாம் பாதில அவரோட நடிப்பும், screen presence ரெண்டும் கொஞ்சம் தாங்கி பிடிக்குது.
ரெண்டு சீன்ல கமல்ஹாசன காட்டுனாலும் அவர் அத சரியா பண்ணிட்டு, post creditலயும் மிரட்டிவிட்டாரு.
தொய்வு:
படதோட நீளம் 3 மணிநேரம் எங்க இது அடுத்த கோப்ராவா மாறிடுமோன்னு நினச்சா நல்ல வேலையா அந்த அளவுக்கு போகல. முதல்பாதி கொஞ்சம், கொஞ்சமா பொறுமையா சோதிக்க கொஞ்சம் அதிகமா சோதிச்சது பிரபாசோட Entryதான். 10, 15 நிமிஷம் முழுக்க சோதிச்சிருச்சு.
படத்தோட ஓட்டத்துக்கு மியூசிக் சரிபட்டு வரல, சந்தோஷ் நாராயணன் கிட்ட இப்படி ஒரு product அ எதிர்பாக்கல. அங்க.. அங்க.. ஜிகிர்தண்டா மியூசிக் வரத தவிர்க்க முடியல.
படத்துல நிறைய நடிகர்கள் இருந்தாலும் cameoகளுக்கு பஞ்சமே இல்ல இயக்குநர்கள் ராஜமவுலி, ராம் கோபால் வர்மா, prince இயக்குனர் அனுதீப், நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், மிர்ணால் தாகூர், திஷா பதானி (ஐயோ சாரி அவங்க ஹீரோயினா? எழுதி ஒட்டுங்கடா மறந்திடப்போது) இப்படி cameoகளுக்கு பஞ்சம் இல்லனாலும் மெயின் நடிகர்களே தண்ணி கேன் போட வந்தேன் broன்னு சொல்லுற மாதிரி தான் பல இடங்கள்ள இருக்கு.
திரைகதைய பொருத்தவர இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பா அமச்சிருக்கலாம், நடிகர்கள அறிமுகபடுத்த எடுத்த நேரத்த கொஞ்சம் மத்த காட்சிகள் மேலயும் போட்டிருக்கலாம்.
ஸ்டண்ட்ல கூட அடிச்சா அப்படியே பொறுமையா பறந்து போற மாதிரியே தெரியுது. இதுக்கு எதுவும் காரணம் இருக்கானுதான் தெரியல. அதுலயும் பிரபாசோட opening fight அ பாக்க சாகோ opening fight அ பாக்குற மாதிரியே இருந்துச்சு.
முடிவு:
பிரபாசுக்கு அடுத்த பாகுபலி ரேஞ்சுக்கு எதிர்பாத்தா, அடுத்த ஆதிபுருஷ ரேஞ்சுக்கு இல்லாத மாதிரி தப்பிவிட்டான் இந்த கல்கி.
Review By Vignesh Krishnan
1
0