யாருப்பா அது?.. சின்ன வயசுல ரஜினியை பார்த்த மாதிரியே இருக்கு.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!(வீடியோ)

Author: Vignesh
12 March 2024, 8:35 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

rajinikanth

பெங்களூர் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது நாடகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ரஜினிகாந்த் அதன் பின்னர் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் பெரும்பாலும் வில்லன் ரோல்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஹீரோவாக அவதாரமெடுத்து சூப்பர் ஸ்டார், தலைவர் என ரசிகர்களால் பட்டம் சூட்டப்பட்டார். கடைசியாக மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

rajini - updatenews360

இந்நிலையில், சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது அதில் நடிகர் ரஜினிகாந்த் சிறுவயதில் இருப்பது போன்ற தோற்றத்தில் ஒருவர் இருக்கிறார். மேலும், அதில் சில்க் போன்ற தோற்றம் உடைய ஒரு நடிகையுடன் இருக்கிறார். இருவரும் தளபதி படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்ற பாடலுக்கு ரொமான்ஸ் செய்வது போல் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் என்னப்பா இவரு சின்ன வயசுல ரஜினியை பார்த்த மாதிரி இருக்காரு, ரஜினிக்கு இந்த பையனை வைத்து பல படங்களுக்கு டூப் போடலாமே என்று கூறி வந்தனர்.

முன்னதாக, ரஜினியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அந்த வீடியோ ஏஐ வீடியோ என்று சொன்னால் ரசிகர்கள் நம்ப மறுக்கிறார்கள். அது எப்படி இவ்வளவு அச்சு அசலாக ரஜினியை உருவாக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில், அந்த வீடியோவை யார் பார்த்தாலும் ஏஐ வீடியோ என்று சொன்னால் நிச்சயம் நம்ப மாட்டார்கள்.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!