டிரெண்டிங் ஆன ‘அண்ணன பாத்தியா’ பாடல்..ரீல்ஸ் எடுத்து வைப் செய்யும் பிரபலங்கள்.!

Author: Selvan
19 March 2025, 4:12 pm

வைரலாகும் “Culik Aku Dong”

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் வீடியோக்கள்,ரீல்ஸ்கள்,பாடல்கள் வைரலாகி வருகின்றன.அந்த வகையில் சமீப காலமாக எந்த மொழி என்பதே தெரியாத சில பாடல்கள் மக்கள் மனதில் இடம்பிடித்து வருகின்றன.

இதையும் படியுங்க: நீ நடிச்சது போதும் கிளம்பு..வடிவேலுவை துரத்திவிட்ட பாரதிராஜா..எந்த படம்னு தெரியுமா.!

இசையின் தனித்துவத்தால் பல பிறமொழிப் பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகின்றன.இந்நிலையில், “அண்ணன பாத்தியா” என்று தொடங்கும் ஒரு பாடல் இணையத்தில் செம வைரலாக பரவி வருகிறது.சமூக ஊடகங்களில் எங்கு பார்த்தாலும் இந்த பாடலின் வீடியோக்கள் நிரம்பி காணப்படுகின்றன.

முதலில்,இந்த பாடல் தாய்லாந்து பாடல் என்று கூறப்பட்டது,ஆனால்,உண்மையில் இது இந்தோனேசிய பாடகி சில்வி குமலசாரி பாடிய “Culik Aku Dong” என்ற பாடல் என்பதும் பின்னர் தெரிய வந்தது.

இந்த பாடல் வரிகள் பலருக்கும் புரியாவிட்டாலும்,அதன் மெட்டும் பாடகியின் ஸ்டைலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.East Java பகுதியில் உள்ள Berkah Talenta என்ற ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்ட இந்த பாடலின் லைவ் நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் சமூக வலைதளங்களில்,இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பகிர்ந்து,ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ரீல்ஸ் எடுத்து வைப் செய்து வருகின்றனர்.

  • Ranya Rao gold smuggling case துபாயில் ரகசிய நகைக்கடை…பலே நெட்ஒர்க்கில் நடிகை ரன்யா ராவ்.!
  • Leave a Reply