அம்பானின்னா சும்மாவா? வெளிநாட்டு பாடகருக்கு அளிக்கப்பட்ட வாய் பிளக்க வைக்கும் சம்பளம்;

Author: Sudha
5 July 2024, 6:53 pm

இந்தியாவின் மிகப் பெரும் தொழிலதிபர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் 2 வது மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா கொண்டாட்டங்கள் 2024 ஆம் வருடம் தொடங்கிய உடனே ஆரம்பித்துவிட்டது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணம் வருகிற மாதம் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த திருமணத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பெரும் தொழிலதிபர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர். நடிகர்,நடிகைகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.

இந்த திருமண நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற கனேடிய ஆங்கில பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல் பாட உள்ளதாகவும் அதற்காக அவருக்கு இந்திய மதிப்பில் 83 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப் படுகிறது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!