தலையே சுத்துது போங்க.. அம்பானி மகன் கல்யாணத்திற்கு வந்த நடிகர்களுக்கு 2 கோடி ரூபாயில் வாட்ச்..! (Video)

Author: Vignesh
15 July 2024, 10:16 am

இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் முதல் ஆளாக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் வானளவு உயர்ந்திருக்கும் அம்பானி சுமார் ரூ. 9,43,091 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கிறார். இதன் மூலம் உலகத்தின் 11வது பெரும் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி – இஷா அம்பானி என்ற இரட்டை குழந்தையும், ஆனந்த் அம்பானி என்ற இளைய மகனும் உள்ளனர்.

இதில் ஆனந்த் அம்பானிக்கு வருகிற ஜூலை 12ம் தேதி திருமணம். இந்தியாவின் பணக்கார பில்லியனர்களில் ஒருவரான வீரன் ஏ. மெர்ச்சந்த் என்ற வைர வியாபாரின் மகள் ராதிகா மெர்ச்சந்த்தை சில ஆண்டுகள் காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். இந்த Pre Wedding கொண்டாட்டம் குஜராத்தின் ஜாம் நகரில் உள்ள அம்பானியின் வீட்டில் நடைபெற்றது. இத்திருமணத்தில், உலக புகழ் பெற்ற தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.

rajini-ambani-1

தற்போது, இந்தியாவின் ஹார்ட் டாப்பிக்காகவே மாறும் அளவிற்கு இவர்களது திருமண கொண்டாட்டங்கள் பேசுபொருளாக உள்ளது. ப்ரீ வெட்டிங், இத்தாலி கொண்டாட்டம் என ஒரு திருமணத்தை ஏதேதோ பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள். நேற்று ஆனந்த் அம்பானி ராதிகாவின் திருமண படுகோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அந்த வகையில் இவர்களது திருமணத்திற்கு செலவழிக்கப்பட்ட மொத்த தொகையும் வெளியாகி உள்ளது. அதாவது, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா திருமணத்தின் செலவு 5,000 கோடி என்றும், இது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 0.5% மட்டும் என்று கூறப்படுகிறது. 600 மில்லியன் டாலர்களுக்கு சமமான ரூபாய் 5000 கோடி அமெரிக்காவில் 10 ஆஸ்கார் விழா நடத்த போதுமான தொகை இன்று பலர் கூறி வருகின்றனர்.

4000 லிருந்து 5000 கோடி செலவாக இருந்தாலும் அம்பானி குடும்பம் சராசரி இந்திய குடும்பம் தங்களின் குழந்தைகளின் திருமணத்திற்கு செய்யும் நிகர மதிப்பில் குறைவான சதவீதத்தையே செலவிட்டுள்ளது. அனைத்து இந்திய குடும்பமும் தங்களது மொத்த செல்வத்தில் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை திருமணத்திற்கு செலவிடுகின்றனர். அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் அம்பானி குடும்பத்தின் நிகர மதிப்பில் 0.5% மட்டுமே செலவழித்துள்ளதால் இது பட்ஜெட் திருமணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் பலர் நடிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விலை உயர்ந்த வாட்சை பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது. Audemars Piguet இந்த வாட்சின் மதிப்பு 2 கோடி ரூபாய் என்பதால், அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகிறார்கள். அந்த வாட்ச் அணிந்திருக்கும் பிரபலங்களின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • Vaadivaasal Tamil movie வாடிவாசலை விட்டு வெளியேறிய சூர்யா..வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்…!
  • Views: - 148

    0

    0