எல்லாம் TRP-க்காக தான்.. விஜய் டிவியில் இருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்ட பிரபலம்..!

Author: Vignesh
10 June 2023, 5:15 pm

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இந்திய அளவில் மிக பிரபலமான பாடலாக திகழ்ந்தவர் அனந்த் வைத்தியநாதன். இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பல இசை அமைப்பாளர்களை உருவாக்கியுள்ளார். விஜய் டிவி ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர் நடுவராக பணியாற்றி வந்தார்.

anand vaidyanathan-updatenews360

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பல போட்டியாளர்களுக்கு இவர் முறையான பயிற்சி கொடுத்து பல பாடகர்களை உருவாக்கியுள்ளார். இவரை சில வருடங்களாகவே இந்த நிகழ்ச்சியில் காணவில்லை, என்ன என்று விசாரித்து பார்த்ததில் இவருடைய தொண்டையில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக குரல் வளம் பாதிக்கப்பட்டதாகவும், இதனால் மருத்துவர்கள் வேகமாக பாடக்கூடாது என்று கூறியிருந்ததாக தெரியவந்தது.

anand vaidyanathan-updatenews360

மேலும், இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி போட்டியாளர்களுக்கு பாடல் சொல்லிக் கொடுத்து தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டதன் மூலமாக இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் வெறும் 21 நாட்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பின்னர் இவர் வெளியே வந்தார்.

anand vaidyanathan-updatenews360

இவர் பாடகர் மட்டும் இல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து இவர் கூறியதாவது, தான் எப்போதுமே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் விஜய் டிவியும் மறக்க முடியாது என்றும், தனக்கு ஒரு பெரிய அளவில் மகிழ்ச்சியை தந்தது என்றால், அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் என்றும், ஒரு காலத்தில் தான் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது பலர் தன்னிடம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவே பழகியதாகவும் தெரிவித்திருந்தார்.

anand vaidyanathan-updatenews360

அதேபோல சிலர் தன்னிடம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவது ரெண்டு மூணு பாடல் தானே எதுக்காக வெட்டி கதை பேசிகிட்டு இருக்கீங்க என்று கேட்டதாகவும், அது வேற ஒன்னும் இல்லைங்க எல்லாம் டிஆர்பிக்காக என்று தான் தெரிவித்ததாகவும், ஒவ்வொரு வாரமும் டிஆர்பி குறைந்தால் அவர்கள் எவ்வளவோ கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் எல்லா நிகழ்ச்சிகளும் டிஆர்பி அடிப்படையாகக் கொண்டுதான் நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

anand vaidyanathan-updatenews360

தன் பலருக்கு அவர்களுடைய திறமையை மெருகேற்றி இருந்ததாகவும், அதற்காக அவர்கள் தொடர்ந்து மரியாதை தர வேண்டும் என ஆசைப்படவில்லை என்றும், அந்த கலையை அவர்கள் மறந்து விடாமல் இருந்தால் சரி, அந்த கலை அழிந்து விட கூடாது என்றும் சரியாக அவர்கள் பயன்படுத்திக் கொள்வதே தன்னுடைய விருப்பம் எனவும் தெரிவித்துள்ளார். சிலர் பேரும் புகழும் கிடைத்தவுடன் தன்னை கண்டு கொள்ளவில்லை என்றும், அது தனக்கு சற்று வேதனையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 573

    0

    1